பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்து பி.பள்ளிப்பட்டி லூர்துபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்பிரசாத் (எ) லியோ(45). பொம்மிடி அருகே பத்திரிரெட்டிஹள்ளி அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தணிகேஸ்வரி(40). இவரும் அரசு பள்ளி ஆசிரியை. 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற ஆசிரியர் அருண்பிரசாத் மதியம் மனைவியிடம் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த 12 பக்க கடிதத்தை பொம்மிடி போலீசார் கைப்பற்றினர்.
அதில், எனது மரணத்திற்கு காரணம், எனக்கு நிலம் விற்ற அதே பகுதியை சேர்ந்த நாமக்காரர் (எ) சிவசங்கர், அவரது மனைவி ஜெயா ஆகியோர்தான். அவர்கள் பொது வழிப்பாதைக்கு 21 அடியை தராததோடு, ஆள் வைத்து அடிக்க முயற்சிப்பதாகபோலீசில் பொய் புகார் கொடுத்ததால் ஏற்பட்ட மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியுள்ளார். இதையடுத்து, சிவசங்கர்(55), அவரது மனைவி ஜெயா(45) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.