Renu Desai Health condition: இதய நோயால் அவதிப்பட்டு வருவது குறித்து ரேணு தேசாய் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டதை பார்த்த பவன் கல்யாணின் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
ரேணு தேசாய்பத்ரி தெலுங்கு படம் மூலம் நடிகையானவர் ரேணு தேசாய். ஜேம்ஸ் பாண்டு படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். அவர் பவர் ஸ்டார் பவன் கல்யாணை காதலித்து கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு பவண் கல்யாணும், ரேணு தேசாயும் முறைப்படி விவாகரத்து பெற்றார்கள். இதையடுத்து மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார் ரேணு தேசாய்.
உடல்நலம்சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார் ரேணு தேசாய். இந்நிலையில் தன் உடல்நலம் குறித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார். அவர் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் கூறியிருப்பதாவது, கடந்த சில ஆண்டுகளாக நான் இதய நோய் மற்றும் சில உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறேன் என்பது எனக்கு நெருக்கமானவர்கள் அனைவருக்கும் தெரியும். சில நேரங்களில் இது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றார்.
போஸ்ட் View this post on Instagram A post shared by renu desai (@renuudesai)
உருக்கம்ரேணு தேசாய் மேலும் கூறியிருப்பதாவது, என் உடல்நல பிரச்சனை குறித்து இன்று போஸ்ட் செய்வதற்கு காரணம் இருக்கிறது. எது நடந்தாலும் தைரியமாக இருக்க வேண்டும் என்று பல பிரச்சனைகளுடன் போராடும் பலருக்கும், எனக்கும் நினைவூட்டத் தான் இந்த போஸ்ட் போட்டுள்ளேன். வாழ்க்கை மற்றும் உங்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். இந்த பிரபஞ்சம் நமக்காக நல்ல திட்டங்கள் வைத்திருக்கிறு. ஸ்கிப்பர் தி பென்குயின் சொல்வது போன்று சில நேரங்களில் ஸ்மைல் அன்ட் வேவ் என தெரிவித்துள்ளார்.
ஆறுதல்Samantha:காதலர் தினத்தை செமயா கொண்டாடிய சமந்தா: அவரின் வேலன்டைன் யார்னு பாருங்கசிகிச்சைகள், மருந்து, யோகா எல்லாம் போய்க் கொண்டிருக்கிறது. நான் குணமாகி விரைவில் ஷூட்டிங்கில் கலந்து கொள்வேன் என நம்புகிறேன் என ரேணு தேசாய் மேலும் தெரிவித்துள்ளார். ரேணு தேசாயின் போஸ்ட்டை பார்த்த பவன் கல்யாண் ரசிகர்களோ, தைரியமாக இருங்க அண்ணி. நிச்சயம் குணமடைந்துவிடுவீர்கள். உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
நடிப்புகெரியரை பொறுத்தவரை 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் படத்தில் நடிக்கிறார் ரேணு தேசாய். ரவிதேஜாவின் டைகர் நாகேஸ்வர ராவ் படம் மூலம் கம்பேக் கொடுக்கிறார் ரேணு. மீண்டும் நடிக்க வருவது என்பது எளிதான முடிவு இல்லை. நான் படப்பிடிப்புக்கு சென்ற முதல் நாளே, நான் இத்தனை ஆண்டுகளாக நடிக்காமல் இருந்தது போன்றே தெரியவில்லை என்றார்.