திருவெற்றியூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவொற்றியூர் ராஜ ஷண்முகம் நகர் பகுதியில் சேர்ந்தவர் ராகேஷ் (25). இவர் திருவெற்றியூரில் உள்ள மோட்டார் சைக்கிள் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ராகேஷ் நேற்று முன்தின இரவு வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக திருவெற்றியூர் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென அவ்வழியாக வந்த மின்சார ரயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ராகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார், ராகேஷின் உடலை கைப்பற்றி பெரித பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.