கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் பேருந்தை நிலையத்தில் ரிஷிபன் என்ற இளைஞர் ஒரு கிப்ட் ஷாப் நடத்தி வந்துள்ளார். அந்த பேருந்து நிலையத்தில் அன்றாடம் ஒரு கல்லூரி மாணவி வந்து செல்வதை கவனித்து வந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு கல்லூரிக்கு செல்ல பேருந்து நிலையம் வந்து நின்ற அந்த மாணவியிடம் தனது காதலை சொல்ல ரிஷிபன் சென்றுள்ளார். அவரைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவி காதலை நிராகரித்துள்ளார்.
என் காதலை எப்படி நிராகரிக்கலாம் என்று ஆத்திரமடைந்த அந்த நபர் பெண்ணை தாக்கி கொன்று விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த கிப்ட் ஷாப் ஓனர் ரிஷிபனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.