அண்டார்டிகாவில் உள்ள பாரிய பனிப்பாறைகளில் ஒன்று உருகி வருவதால், கடல் நீர்மட்டம் எதிர்பாராதவிதமாக அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அண்மைய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.
கடல் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். மேற்கு அண்டார்டிகாவில் உள்ள ‘த்வைட்ஸ்’ எனும் பனிப்பாறையே இந்த அவதான நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த பனிப்பாறையின் அளவு 92,000 சதுர கிலோமீட்டர் ஆகும். இது சுமார் பெரிய பிரித்தானியாவின் பரப்பளவிற்கு ஏற்றளவாக அமைந்துள்ளது.
அண்டார்டிகாவில் பனி உருகுவதை ஆய்வு செய்வதற்காக பிரிட்டனும் அமெரிக்காவும் இணைந்து இந்த பனிப்பாறையின் கீழ் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோ இயந்திரம் ஒன்றை வைத்திருந்தனர். அதன்படி, சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் இந்த இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன்இ பனிப்பாறை முழுவதுமாக உருகினால் உலகலாவிய ரீதியில் கடல் மட்டம் அரை மீட்டர் அளவு உயரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பனிப்பாறை உருகி வருவதாக வெளிநாட்டு செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்த பனிப்பாறை உருகுவது தொடர்பாக பிரித்தானியா மேற்கொண்ட கூட்டு ஆய்வுஇ உலகெங்கிலும் மேற்கொள்ளப்படாத மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்றாகும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.