வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதுடில்லியில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளதால், 2023ம் ஆண்டு முக்கியமான ஆண்டு. இதனால், டில்லி போலீஸ் உஷாராக இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
டில்லி போலீசின் 76 வது எழுச்சி தினத்தை முன்னிட்டு நடந்த விழாவில் அமித்ஷா பேசியதாவது; இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதனால், 2023ம் ஆண்டு டில்லி போலீசுக்கு முக்கியத்துவமான ஆண்டு. ஏராளமான வெளிநாட்டு தலைவர்கள் வர உள்ளதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் போலீசார் உஷாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில், கடந்த மாதம் வழிப்பறி திருடனால் அடித்து கொல்லப்பட்ட போலீஸ் உதவி எஸ்ஐ ஷயாம்பு தயாலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement