சென்னையில் 800 கோடி மோசடி! மூன்று பெண்கள் அதிரடி கைது..நம்பி ஏமாந்த 10 ஆயிரம் பேர்


தமிழக தலைநகர் சென்னையில் 10,000 பேரை ஏமாற்றி 800 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிக வட்டி

சென்னையில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற தொழில் நிறுவனம் இயங்கி வந்தது. தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 15 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்றும், மாதந்தோறும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்தது.

அதனை நம்பிய பலரும் உடனடியாக முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இவ்வாறாக சுமார் 10,000 பேர் அந்த நிறுவனத்தில் பணத்தை செலுத்தியதாக கூறப்படுகிறது.

சென்னையில் 800 கோடி மோசடி! மூன்று பெண்கள் அதிரடி கைது..நம்பி ஏமாந்த 10 ஆயிரம் பேர் | 10 Thousand People Cheated 800 Crore In Chennai

இந்த நிலையில் கூறியபடி வட்டியை கொடுத்ததாக அந்த நிறுவனம், அசல் தொகையையும் திருப்பி தரவில்லை.

800 கோடி மோசடி

இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர்களில் 1,500 பேர் பொலிஸில் புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், மூன்று பெண்களை கைது செய்தனர்.

சென்னையில் 800 கோடி மோசடி! மூன்று பெண்கள் அதிரடி கைது..நம்பி ஏமாந்த 10 ஆயிரம் பேர் | 10 Thousand People Cheated 800 Crore In Chennai

மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் சுமார் 10,000 பேரிடம் 800 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.