மணிலா: துருக்கி, சிரியாவில் கடந்த 6ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பாக இந்தியாவில் சில பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. நேற்று (பிப்.,15) நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தொலைதொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதால் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement