அதானி- மோடி உறவு; ஆதாரம் எல்லாம் ரெடியா இருக்கு- ராகுல் காந்தி சஸ்பென்ஸ்!

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமத்தின் மீது நிதி மோசடி குற்றசாட்டுகளை வெளியிட்ட பிறகு, எதிர்க்கட்சிகள் அனைத்தும் பாஜகவை கடுமையாயக விமர்சனம் செய்து வந்தது. இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்ததோடு, அதானி மற்றும் மோடி இருக்கும் படத்தை காட்டினார்.

அதானியின் வளர்ச்சிக்கு பாஜகவும், மோடியும் துணை நிற்பதாகவும், அவரின் சொத்து மதிப்பு ஒரு குறிப்பிட்ட காலத்தில் நினைத்து பார்க்கமுடியாத அளவு அதிகரித்ததாகவும் கூறினார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பாஜக தரப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுலின் 18 கருத்துக்கள் நாடாளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

ஆதாரம் அற்ற குற்றசாட்டுகளை பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி வைப்பதாக ஊற்றப்பட்டது. இதனை அடுத்து, பாஜக எம்பி நிஷிகாந்த் துபே உரிமை மீறல் நோட்டீசை ராகுல் காந்திக்கு வழங்கினார். மேலும் இது குறித்து பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

ரயில் சக்கரத்தில் தீ; வண்டியில் இருந்து குதித்த பயணிகள்.. மும்பையில் ஷாக்

உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பாக மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி பதில் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அந்த பதிலில்; அதானி குழுமத்தின் மீதும், அதானி மற்றும் பிரதமர் மோடி இடையே இருக்கும் உறவு பற்றி நான் மக்களவையில் பேசிய கருத்துக்கள் அனைத்துமே உண்மை தான். அதில் எந்தவிதமான தவறும் இல்லை.

தொழிலதிபர் அதானி மற்றும் பிரதமர் இடையே உள்ள தொடர்பு குறித்து அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது. தேவைப்பட்டால் அதனை சமர்ப்பிக்க தயாராக இருப்பதாகவும் அந்த அக்கடிதத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பதில் அளித்ததாக தெரிகிறது. மக்களவையில் ராகுல் காந்தி முன் வைத்த அதானி மற்றும் மோடி மீதான விமர்சனங்களுக்கு விரிவான பதிலை அளித்ததாகவும் தெரிகிறது.

திரிபுரா தேர்தல் விறுவிறு: 2023-ல் காத்திருக்கும் ட்விஸ்ட்- வியூகம் வகுத்த பாஜக சிஎம் மாணிக் சஹா!

இது குறித்து வயநாட்டில் பேசும் போது ராகுல் காந்தி மக்களிடையே உரையாடிய போது கூறியதாக தெரிகிறது. தான் பேசிய கருத்துக்கள் குறித்து ஒரு போதும் வருந்தவில்லை. ஏனெனில் அவை அனைத்தும் ஆதாரத்துடன் கூடிய குற்றசாட்டுகளே என ராகுல் காந்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ராகுல் காந்திக்கு பாஜக தரப்பில் இருந்து மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டதற்கு ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே மற்றும் பிற எம்பிக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக இது போன்ற தவறான குற்றசாட்டுகளை வைப்பதாக பிரதமர் மோடியும் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.