வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள மற்றும் குறிப்பிட்ட தூரத்தை கடக்க அதிக நேரம் ஆகும் நகரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகிலேயே பெங்களூரு நகரம் 2வது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் லண்டன் உள்ளது.
வாகனங்களின் பெருக்கத்தால் பல இடங்களில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சின்னாப்பின்னமாகி வருகின்றனர். குறிப்பிட்ட இடத்தை கடப்பதற்குள் போதும்போதும் என்றாகி வெறுத்து போய்விடுகின்றனர்.
அந்த வகையில் உலகின் மெதுவான நகரங்கள் என்ற பெயரில் ‛டாம் டாம்’ என்ற தனியார் நிறுவனம் ஆய்வு நடத்தியது. 56 நாடுகளை சேர்ந்த 389 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், இந்தியாவின் பெங்களூரு நகரம் 2ம் இடத்தை பிடித்துள்ளது. அங்கு 10 கி.மீ தூரத்தை கடக்க 29 நிமிடங்கள் 9 நொடிகள் எடுத்துக்கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
முதலிடத்தில் லண்டன் நகரம் உள்ளது. லண்டனில் 10 கி.மீ தூரத்தை கடக்க 36 நிமிடங்கள் 20 நொடிகள் ஆகிறதாம். அயர்லாந்தின் டப்லின் நகரம், ஜப்பானின் சப்போரோ, இத்தாலியின் மிலன் ஆகியவை முறையே 3, 4, 5ம் இடத்தில் உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement