வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வடகிழக்கு மாநிலமான திரிபுரா, மேகலாயா மற்றும் நாக்லாந்து ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ரூ 147.84 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

வட கிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து உட்பட ஒன்பது மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், இந்த ஆண்டு நடக்கவுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு மாநிலமான திரிபுராவுக்கு இன்று (பிப்., 16) ம் தேதி நடந்தது. நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டசபை தொகுதிகளுக்கு பிப்., 27ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுகள், மார்ச் 2ல் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்த மூன்று வடகிழக்கு மாநிலங்களும் அளவில் சிறியதாக இருந்தாலும், இந்த தேர்தல், 2024 லோக்சபா தேர்தலுக்கான முன்னோட்டமாக கருதப்படுவதால், மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
மேலும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் வசமிருந்த வடகிழக்கு மாநிலங்களில், பா.ஜ., மெல்ல வேரூன்றி வருகிறது குறிப்பிடத்தக்கது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சட்டவிரோதமாக எந்த ஆவணமின்றி பணம் எடுத்துபவர்களை கண்டறியும் விதமாக பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு மாநிலமான திரிபுரா, மேகலாயா மற்றும் நாக்லாந்து ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ரூ 147.84 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடுகையில் 20 மடங்கு அதிகம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement