என்னை ஹீரோவாக ஏற்க மறுத்து அவமானப்படுத்தினார்கள்: பிரதீப் ரங்கநாதன்

பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய 'லவ் டுடே' படம் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானது. இந்த படத்தின் 100வது நாளை படப்பிடிப்பு குழுவினர் கொண்டாடினார்கள். இதில் நாயகி இவானா, இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், அர்ச்சனா கல்பாத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது: எனது முதல் படமான 'கோமாளி' வெற்றி பெற்றாலும், அதற்கான அங்கீகாரம், பாராட்டு எனக்கு கிடைக்கவில்லை. இதனால் மனவருத்தம் அடைந்தேன். 'லவ் டுடே' படத்தின் கதையை கேட்ட பலர் இந்த கதையில் நடிக்க வேறு சில நடிகர்களை சொன்னார்கள். நான்தான் நடிப்பேன் என்றதும் நிராகரித்தார்கள். என்னை அவர்கள் ஹீரோவாக ஏற்க மறுத்து, அவமானப்படுத்தினார்கள். ஆனால் ஏஜிஎஸ் நிறுவனம் முன் வந்தது. அதோடு அவர்கள் எனக்கு இந்தப்படத்தின் உருவாக்கத்தில் பெரும் சுதந்திரம் தந்தார்கள்.

இந்த படத்தின் இசையை பொறுத்தவரை யுவன் சாரிடம், நிறைய விஷயங்களில் கூடுதலாக, ஈடுபாட்டுடன் இயங்கினேன். யுவன் சார் மிக அற்புதமான இசயை தந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு யுவனின் இசை கச்சேரிக்கு டிக்கெட் கிடைக்காமல் சுவரின் மீது அமர்ந்து கேட்டேன். இப்போது அவர் என் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். மக்கள் கொடுத்த ஆதரவில் தான் இந்த படம் பெரிய படமாக மாறியது. இந்த படத்திற்காக உழைத்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி கொள்கிறேன். இவ்வாறு பிரதீப் ரங்கநாதன் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.