சுவா;”இந்தியா – பிஜி இடையேயான நட்புறவு தொடரும். பிஜியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்வதற்கு ஒத்துழைப்பு அளிப்பதில் பெருமைப்படுகிறோம்,” என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
தென் பசிபிக் நாடான பிஜியில், ௧௨வது உலக ஹிந்தி மாநாடு நடக்கிறது. இதை, நம் வெளியுறவு அமைச்சகம் பிஜி அரசுடன் இணைந்து நடத்துகிறது.
இதில் பங்கேற்பதற்காக நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிஜி சென்றுள்ளார். தலைநகர் சுவாவில் நேற்று அந்நாட்டின் பிரதமர் சிடிவேனி லிகமமடா ருபேகாவை அவர் சந்தித்து பேசினார். அப்போது, இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இது குறித்து ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது:
இந்தியா – பிஜி இடையேயான நட்புறவு தொடர்ந்து வலுவாகவே உள்ளது. பிஜியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் இணைந்து செயல்படுவதில் இந்தியா பெருமை கொள்கிறது.இரு நாடுகளுக்கு இடையே, விசா விலக்கு அளிப்பது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement