7ஆவது கொரிய மொழித்திறன் பரீட்சைக்கு, ஒன்லைன் மூலம் அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக பதிவு செய்யும் நடவடிக்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது.
தென் கொரியாவின் உற்பத்தி மற்றும் கடற்றொழில் துறைகளில் வேலை வாய்ப்புகளுக்காக இந்த ஆண்டு நடைபெறவுள்ள 7ஆவது கொரிய மொழித்திறன் பரீட்சைக்கு தோற்றவிரும்புவோர் இதற்காக பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
எதிர்வரும் 22ஆம் திகதி வரை பதிவுகளை மேற்கொள்ள முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்களை www.slbfe.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.