சேலம்: கர்நாடக வனத்துறை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, மீனவர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். தமிழக எல்லையான பாலாற்றில் கர்நாடக வனத்துறையின் துப்பாக்கிச்சூட்டில் மீனவர் கொல்லப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். கர்நாடக வனத்துறையினர் மீனவர் ராஜாவை சுட்டுக் கொன்றதாகவும் உடலில் காயங்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்னர்.
