இந்திய பயணத்தை ரத்து செய்த ஈரான் அமைச்சர்; சர்வதேச அரசியலில் பரபரப்பு.!

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் கொதிநிலையை எட்டியுள்ளது. ஹிஜாப் அணியாமல் சென்ற மாஷா அமினி என்ற இளம்பெண்ணை கலாச்சார காவல்ப்பிரிவு தாக்கியதில் மரணமடைந்தார். ஆனால் அமினி காவலில் தாக்கப்பட்ட பின்னர் இறந்தார் என்ற குற்றச்சாட்டை ஈரான் மறுத்தது, மேலும் அவரது மரணம் நோயால் ஏற்பட்டதாகக் கூறியது.

அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் 500க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 15 ஆயிரத்திற்கு அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு ஈரான் தூக்குத் தண்டனை அறிவித்தது. ஆனால், இவற்றின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை.

மேலும், போராட்டக்காரர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பொதுவெளியில் தூக்கிலடப்படும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. ஹிஜாப் எதிரான போராட்டங்கள் குறித்து இந்தியா மவுனம் காத்து வருகிறது. நவம்பரில், ஈரானில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து உண்மையைக் கண்டறியும் பணியை அமைப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வாக்களிக்காத நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடதக்கது.

இந்தநிலையில் இந்தியாவிற்கு பயணம் செய்ய இருந்த ஈரான் வெளியுறவு அமைச்சரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈரானிய பெண்கள் தலைமுடியை வெட்டுவது போன்ற வீடியோ வெளியானதால், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் ஏற்பாடு செய்திருந்த ரைசினா உரையாடலில் கலந்து கொள்வதற்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் அடுத்த மாதம் இந்தியா வரவிருந்தார். இந்தநிலையில் இந்நிகழ்வில் தமது அமைச்சர் கலந்து கொள்ள மாட்டார் என ஈரான் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சுகாதாரத் துறை சங்கங்களின் கூட்டமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் படத்துடன் ஈரானிய பெண்களின் தலைமுடியை வெட்டுவது போன்ற காட்சியை உள்ளடக்கிய ரைசினா உரையாடலுக்கான விளம்பர வீடியோ வெளியிட்டதால் ஈரான் அமைச்சரின் பயணம் ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஈரான் அரசுக்கு எதிரான போராட்டங்களை உள்ளிட்டக்கிய விளம்பர வீடியோ குறித்து ஈரான் வருத்தமடைந்ததாக தெரிவித்துள்ளது.

‘பிரதமராக இம்ரான் கான் தொடர்ந்திருந்தால்..’- முன்னாள் ராணுவ தளபதி பரபரப்பு.!

இது குறித்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (ORF) மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தை ஈரானிய தூதரகம் அணுகியது. மேலும் போராட்டகாரர்களுடன் தங்கள் அதிபரின் படத்தை இடம் பிடித்ததற்கு கடும் கண்டனம் ஈரான் தெரிவித்து, அதை நீக்க வேண்டுகோள் விடுத்தது. ஆனால் ஏற்பாட்டாளர்கள் அந்த வீடியோ பகுதியை நீக்க மறுத்தள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.