புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டெக்னோ பாப் 7 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் இந்த போன் அறிமுகமாகி உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேச நிறுவனமான டெக்னோ மொபைல் நிறுவனம் கடந்த 2006-ல் நிறுவப்பட்டது. 2017 வாக்கில் இந்தியச் சந்தையில் நுழைந்தது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்நிறுவனத்தின் போன்கள் அனைத்தும் நொய்டாவில் உள்ள உற்பத்திக் கூடத்தில் அசெம்பிள் செய்யப்படுவதாக தகவல். இந்நிலையில், டெக்னோ பாப் 7 புரோ ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.56 இன்ச் ஹெச்டி+ டாட் நாட்ச் டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்
- மீடியாடெக் ஹீலியோ ஏ22 ப்ராசஸர்
- 2ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ், 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் கிடைக்கிறது
- 5,000mAh பேட்டரி
- டைப் சி சார்ஜிங் போர்ட்
- 12 மெகாபிக்சல் ட்யூயல் ரியர் கேமரா
- 5 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும்
- 2ஜிபி ரேம் போனின் விலை ரூ.6,799
- 3ஜிபி ரேம் போனின் விலை ரூ.7,299