கடைசி மணி நேரத்தில் களத்தில் குதித்த கத்தார் கோடீஸ்வரர்கள்: கைமாறும் மான்செஸ்டர் யுனைடெட்


சிவப்பு பேய்கள் என ரசிகர்களால் கொண்டாடப்படும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியை கடைசி கட்டத்தில் கத்தார் கோடீஸ்வரர்கள் முன்னெடுத்துள்ளனர்.

கத்தார் கோடீஸ்வரர்கள்

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகத்தை தங்கள் பொறுப்பில் கொண்டுவரு,ம் பொருட்டு கத்தார் கோடீஸ்வரர்கள் 5 பில்லியன் பவுண்டுகள் தொகையை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடைசி மணி நேரத்தில் களத்தில் குதித்த கத்தார் கோடீஸ்வரர்கள்: கைமாறும் மான்செஸ்டர் யுனைடெட் | Qatar Investors Bid For Man Utd

@PA

கத்தாரின் முதன்மை வங்கி ஒன்றின் தலைவரும் வாழ்நாள் மான்செஸ்டர் யுனைடெட் அணி ரசிகருமான Sheikh Jassim Bin Ham Al Thani என்பவரே இந்த கடைசி கட்ட முயற்சியை முன்னெடுத்துள்ளார்.

தற்போது கிளேசர்ஸ் குடும்பம் வசமிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணி இனி கத்தார் கோடீஸ்வரர் வசம் கைமாறப்பட வாய்ப்புகள் அதிகம் என கூறுகின்றனர்.
இருப்பினும் இன்னும் 5 கோடீஸ்வரர்கள் மான்செஸ்டர் யுனைடெட் அணியை கைப்பற்றும் திட்டத்துடன் களமிறங்கியுள்ளனர்.

மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்க விரும்புவோர், தொகை தொடர்பான ஆதாரங்களை வெளியிட வேண்டும் எனவும், முறைப்படி கோரிக்கை முன்வைக்க வேண்டும் எனவும் கிளேசர்ஸ் குடும்பம் அறிவித்திருந்தது.

மான்செஸ்டர் யுனைடெட் அணி

6 பில்லியன் பவுண்டுகள் வரையில் விலை பேசப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், சவுதி அரேபியா, சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் இருந்தும் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்க சிலர் முன்வந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

கடைசி மணி நேரத்தில் களத்தில் குதித்த கத்தார் கோடீஸ்வரர்கள்: கைமாறும் மான்செஸ்டர் யுனைடெட் | Qatar Investors Bid For Man Utd

@getty

இதனிடையே, கத்தாரின் முன்னாள் பிரதமரின் மகனான Sheikh Jassim மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்க முன்வந்ததுடன், அணியின் 500 மில்லியன் பவுண்டுகள் கடனையும் ஏற்க முன்வந்ததாக கூறப்படுகிறது.

அணியை மொத்தமாக வாங்கவே Sheikh Jassim விரும்புவதாகவும், அத்துடன் அதன் முந்தைய புகழுக்கு கொண்டு செல்லவும் அவர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.