கோவை: கோவையில் கடந்த 2021ல் ரவுடி குரங்குஸ்ரீராம் (23), வெட்டி கொல்லப்பட்டார். இதற்கு பழி தீர்க்க, கடந்த 13ம் தேதி ரவுடி கோகுல்(25) கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், ரவுடிகள் சிலர், இளம்பெண் ஒருவரை உருட்டை கட்டை கொடுத்து நடக்க வைத்து மீம்ஸ் வீடியோ தயாரித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். ரத்தினபுரி, சின்னவேடம்பட்டி, கண்ணப்ப நகர், சங்கனூர் பள்ளம், மோர் மார்க்கெட், கணபதி என பல்வேறு பகுதியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் இன்ஸ்டாகிராமில் கத்தி, அரிவாளுடன் வீடியோக்களை வெளியிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
