குழந்தை திருமணத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும்: அசாம் முதல்வர் ஹிமந்தா உறுதி

கவுகாத்தி: குழந்தை திருமணங்களுக்கு எதிரான நடவடிக்கை நல்ல பலனை அளித்துள்ளதாக அசாம் முதல்வர் தெரிவித்தார். அசாமில் குழந்தை திருமணங்களை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. இதில், மொத்தம் 3,031 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,225 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.  போலீஸ் நடவடிக்கைக்கு கவுகாத்தி உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.ஆனால், குழந்தை திருமணம் என்ற சமூக கொடுமைக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று  முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்தார்.

ஹிமந்தா பிஸ்வா நேற்று டிவிட்டரில் பதிவிடுகையில்,  சட்ட விரோத குழந்தை திருமணங்களுக்கு எதிரான நடவடிக்கை நல்ல பலன் அளித்துள்ளது. தங்களது குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்கான நிகழ்ச்சிகளை பல குடும்பங்கள் தற்போது ரத்து செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.