Jagapathi Babu: 7 நாட்கள் சாப்பாடு கொடுக்காமல் அவமானப்படுத்தினார்கள்… கண்ணீர்விட்ட ரஜினி பட வில்லன்!

தான் சினிமாவில் அறிமுகமான காலத்தில் பட்ட அவமானங்களை எல்லாம் உருக்கமாக கூறியுள்ளார் நடிகர் ஜெகபதி பாபு.

Jagapathi Babu
ஜெகபதி பாபுதமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெகபதி பாபு. 61 வயதான ஜெகபதி பாபு ஆரம்பக் காலத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது பிரபல நடிகர்களுக்கு வில்லனாகவும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இதுவரை 170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார் ஜெகபதி பாபு.
​ Vaathi: பொறுமையை சோதிக்கிறது… வாத்தி படத்தில் உள்ள நெகட்டிவ்ஸ் இவைதான்!​
லிங்கா, அண்ணாத்ததெலுங்கில் மட்டும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெகபதி பாபு, தமிழில் 2006 ஆம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியான மதராஸி படம் மூலம் ஜெகபதிபாபு அறிமுகமானார்.
தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான தாண்டவம், ரஜினிகாந்தின் லிங்கா, விஜய்யின் பைரவா, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ளார். கடைசியாக தமிழில் அண்ணாத்த, லாபம் ஆகிய படங்களில் நடித்தார்.
​ தனுஷை பிரிந்த பிறகு ஆளே மாறிப்போன ஐஸ்வர்யா!​
ஆரம்பத்தில் பட்ட அவமானம்இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு நேர்க்காணல் அளித்துள்ள ஜெகபதி பாபு, சினிமாவில் ஆரம்பக் காலத்தில் தான் பட்ட அவமானங்களை மனம் திறந்து பேசியுள்ளார். அதில் தான் சினிமாவுக்கு வந்து 35 ஆண்டுகள் ஆகிறது என்றும் தனக்கு சினிமா தவிர வேறு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். தனது சினிமா வாழ்க்கையில் பல கசப்பான நினைவுகள் இருந்தாலும், அதில் மறக்க முடியாத ஒன்றை சொல்கிறேன் என ஒரு விஷயத்ரதை தெரிவித்துள்ளார்.​ Adjustment in Tamil cinema: படுக்கைக்கு அழைக்கும் பிரபலங்கள்… மவுனம் கலைக்கும் முன்னணி நடிகைள்… அதிர்ச்சியில் கோலிவுட்!​
7 நாட்கள் சாப்பாடு கொடுக்கல1992 ஆம் ஆண்டு சாகசம் என்ற தெலுங்கு படத்தில் இரண்டாவது ஹீரோவாக தான் நடித்ததாகவும் அப்போது படப்பிடிப்பில் தனக்கு 7 நாட்கள் சாப்பாடு கொடுக்கவே இல்லை என உருக்கமாக கூறியுள்ளார். மேலும் தான் சாப்பிட்டேனா என்று கூட யாரும் கேட்கவில்லை என்றும் வருத்தப்பட்டுள்ளார் ஜெகபதி பாபு. தனது இந்த நிலைமையை பார்த்து அங்கிருந்த லைட் பாய் ஒருவர் கண்ணீர் விட்டு அழுதார் என்றும் அந்த அவமானம்தான் தனது வாழ்க்கையில் ஒரு நல்ல பாடமாக அமைந்தது என்றும் கூறியுள்ளார். ​ Bakasuran: பகாசுரன் படத்தில் உள்ள மைனஸ் இதுதான்… புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்!​
கேவலமாக பார்த்தார்கள்தொடர்ந்து 15 ஆண்டுகள் தெலுங்கில் மட்டும் நடித்து வந்ததால், எப்படி கொடுத்தாலும் நடிப்பார் என தன்னை கேவலமாக பார்த்தார்கள் என்று கூறியுள்ள ஜெகபதி பாபு அதன்பிறகுதான் வேறு மொழிகளில் நடிக்கலாம் என முடிவு செய்ததாக தெரிவித்தார். மேலும் தனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்றும் தனது இளைய மகளிடம் திருமணமே செய்து கொள்ளாதே என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார் ஜெகபதி பாபு. ஜெகபதி பாபு ஆரம்பக்காலத்தில் தெலுங்கு சினிமாவில் அவமானப்பட்டதை தற்போது வெளிப்படையாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
​ Bakasuran: வெறித்தனம்… நிச்சயம் டிஸ்டர்ப் பண்ணும்… பகாசுரன் டிவிட்டர் விமர்சனம்!​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.