தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான வாத்தி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
வாத்தி படம்தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் முதல் முறையாக கூட்டணி அமைத்து நடித்தப் படம் வாத்தி. தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சார் என்றும் இந்த படம் நேற்று வெளியானது. இதில் மலையாள நடிகை சம்யுக்தா மேனன், ஆடுகளம் நரேன், கென் கருணாஸ், சமுத்திரக்கனி, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. Jagapathi Babu: 7 நாட்கள் சாப்பாடு கொடுக்கமால் அவமானப்படுத்தினார்கள்… கண்ணீர்விட்ட ரஜினி பட வில்லன்!
தெலுங்கிலும் வரவேற்புகல்வி வியாபாரமாக்கப்படுவதை மைய்யப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள், படத்தின் பல காட்சிகள் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் கனெக்ட் ஆகும் என்றும் பல இடங்களில் கண்ணீர் வரவழைக்கிறது என்றும் உருக்கமாக கூறி வருகின்றனர். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ரசிகர்கள் தனுஷின் சார் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
Sadha: பளபளக்கும் பார்ட்டி வியரில் பர்த்டே பேபி சதா.. கலக்கல் க்ளிக்ஸ்!
தனுஷ் நடிப்புகுறிப்பாக நடிகர் தனுஷின் நடிப்பை பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள். இந்தப் படத்தில் நடிக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் தனது சினிமா கெரியரில் தனுஷ் ஒரு நல்ல படத்தை மிஸ் பண்ணிருப்பார் என்றும் கூறி வருகின்றனர். மேலும் ஆசிரியர் பாலமுருகன் கதாப்பாத்திரத்திற்கு தனுஷ் கச்சிதமாக பொருந்தியிருப்பதாக கூறி வருகின்றனர். ஹீரோயினான நடிகை சம்யுக்தாவுக்கு பெரிதாக ஸ்கோப் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. Vaathi: பொறுமையை சோதிக்கிறது… வாத்தி படத்தில் உள்ள நெகட்டிவ்ஸ் இவைதான்!
முதல் நாள் வசூல்முதல் நாளிலேயே ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற வாத்தி படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி , தமிழ் நாட்டில் ஓபனிங் நாளில் 8 கோடி ரூபாயை வசூலித்துள்ளது வாத்தி. இதேபோல் தெலுங்கில் 3 கோடி ரூபாயும் கர்நாடகாவில் 1.5 கோடியும் வெளிநாடுகளில் 1.5 கோடி என உலக அளவில் மொத்தமாக 14 கோடி ரூபாயை வாத்தி படம் முதல் நாளில் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷை பிரிந்த பிறகு ஆளே மாறிப்போன ஐஸ்வர்யா!
மேலும் அதிகரிக்கும்இதனிடையே வார இறுதி நாளான இன்றும் நாளையும் வாரவிடுமுறை என்பதால் வாத்தி படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு வாத்தி படத்திற்கு பாஸிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் திரையரங்குகளில் வாத்தி படத்திற்கான ஸ்க்ரீன்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கடுப்படுகிறது.
Adjustment in Tamil cinema: படுக்கைக்கு அழைக்கும் பிரபலங்கள்… மவுனம் கலைக்கும் முன்னணி நடிகைள்… அதிர்ச்சியில் கோலிவுட்!
Vaathi