சிவசேனா வழக்கில் தீர்ப்பு… குஷியில் எடப்பாடி.. குழப்பத்தில் ஓபிஎஸ்?

2019 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் சிவா சேனா, பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. இதில் பாஜக அதிக இடங்களை வெற்றிபெற்ற நிலையில், சிவ சேனா குறைவான இடங்களை கைப்பற்றியது. இருந்த போதிலும், உத்தவ் தாக்கரே முதல்வராக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

இதனால், பாஜக மற்றும் சிவ சேனா இடையே பிளவு ஏற்பட்டது. பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சிவ சேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக தொடர்ந்த நிலையில், கடந்த 2022 -ல் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இருவருக்கும் பிளவு ஏற்பட்டது.

அடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றார். கட்சியின் சின்னம் மற்றும் பெயருக்கு இரு தரப்பினரும் மோதிக்கொண்டு வந்தனர். இதனை அடுத்து தேத்தல் ஆணையம் சிவ சேனாவின் சின்னமான வில் அம்பை முடக்கி, இருவருக்கும் வேறு வேறு சின்னத்தை வழங்கியது.

கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்த பாஜக; காதில் பூ வைத்த காங்கிரஸ்… சூடுபிடிக்கும் 2023 தேர்தல்!

இது குறித்து இறுதி விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே வசம் உள்ள எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களின் அடிப்படையில் சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னம் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு உரியது என தீர்ப்பை வெளியிட்டது. இருதரப்பிலும் உள்ள எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பெற்ற வாக்குகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் இந்த தீர்ப்பு ஜனநாயக படுகொலை என உத்தவ் தாக்கரே தரப்பு கூறி வந்தனர். அதே நேரத்தில் இது, உண்மைக்கும் மக்களுக்கும் கிடைத்த வெற்றி என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். பால் தாக்கரேவால் தொடங்கப்பட்ட சிவ சேனா தற்போது அவரின் குடும்பத்தினருக்கு கிடைக்காமல், ஏக்நாத் ஷிண்டே அணிக்கு கிடைத்து இருப்பது மஹாராஷ்டிரா அணியில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க, மஹாராஷ்டிரா அரசியல் அலை தமிழகம் பக்கமும் திரும்பி அதிக கவனத்தை ஈர்த்து உள்ளது என கூற வேண்டும். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் அதிமுகவின் இரு அணிகளாக செயல்படுவதோடு, உண்மையான அதிமுக தாங்கள் தான் என கூறி வருகின்றனர்.

இருவரின் போட்டியால் அதிமுகவின் அடையாளமான இரட்டை இல்லை சின்னம் முடங்கும் அளவிற்கு பல நெருக்கடிகளை சந்தித்தது. உச்சமன்றத்தில் தீர்ப்பு நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது ஈரோடு தேர்தலில் அதிமுக சார்பாக எடப்பாடி தரப்பில் இருந்து களம் காண்கின்றனர். சிவ சேனாவின் தீர்ப்பை தமிழக அரசியலில் யோசிக்கும் போது அதிகப்படியான சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓ.பன்னீர் செல்வம் பக்கம் காட்டிலும் எடப்பாடி பக்கம் அதிகம் இருக்கின்றனர்.

எனவே தீர்ப்பு நமக்கு தான் என எடப்பாடி தரப்பு நேர்மறையாக யோசிக்கும் நேரத்தில், எங்கு கட்சி கைவிட்டு போய்விடுமோ என பன்னீர்செல்வம் தரப்பு சிறிது குழப்பத்தில் இருப்பர். மகாராஷ்டிராவின் நிலவரத்தை வைத்து தமிழகத்தில் முடிவுக்கு வர முடியாது எனினும், இவ்வாறு அதிமுகவில் நடக்குமோ என எதிர்பார்ப்புகள் நிலவியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.