கோவிட் தொற்றின் சமயத்தில், அதிகப்படியான ஆட்களை வேலைக்கு எடுத்த தொழில்நுட்ப நிறுவனங்கள், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.

அமேசான், ட்விட்டர் என வரிசையாகப் பல டெக் ஜாம்பவான் நிறுவனங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள இந்திய ஊழியர்களில், 450 நபரை பணிநீக்கம் செய்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்குப் பிப்ரவரி 16 வியாழன் அன்று இ – மெயில் அனுப்பி உள்ளது.
அதாவது கூகுளின் தாய் நிறுவனமான `Alphabet Inc’ கடந்த மாதம் தனது ஊழியர்களில் இருந்து 12,000 நபரை வேலையில் இருந்து நீக்கியதாக அறிவித்தது. நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் இது ஆறு சதவிகிதம் ஆகும். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து கூகுள் தனது பணியாளர்களை நீக்கியுள்ளது.

கூகுளின் இந்த பணிநீக்க நடவடிக்கையால் விற்பனை, சந்தைப்படுத்தல் போன்ற செயல்பாடுகளில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.
டெக் நிறுவனங்களில் பணிநீக்க நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே இருப்பதால், இது ஊழியர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது…