தாய்லாந்தில் பிரபலமடையும் கருப்பு நூடுல்ஸ்: இணையவாசிகளை ஈர்க்கும் தயாரிப்பு வீடியோ


தாய்லாந்தில் தனித்துவமான கருப்பு நூடுல்ஸ் இணையத்தில் பரவி மில்லியன் கணக்கான மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


கருப்பு நூடுல்ஸ்

வித்தியாசமான உணவு வகைகள் எப்போதும் மக்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி விடும் நிலையில், அவற்றை வாழ்வில் ஒரு முறையாவது நிச்சயமாக முயற்சித்து பார்த்து விடவேண்டும் என்ற எண்ணத்தையும் பெரும்பாலான மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விடுகிறது.

அந்த வகையில் தாய்லாந்தின் “தனித்துவமான தெரு உணவு” மக்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், தாய்லாந்து பெண் ஒருவர் கருப்பு ஸ்பாகெட்டி உடன் பாஸ்தா(pasta with black spaghetti) தயாரிக்கும் முறை காட்டப்பட்டுள்ளது.

அதில் அந்த பெண் வழக்கத்திற்கு மாறான கருப்பு நூடுல்ஸை ஒரு பாத்திரத்தில் வைத்து உப்பு, காய்கறிகள் மற்றும் பிற பொருட்களும் சேர்த்து வறுக்கத் தொடங்குகிறாள்.

நூடுல்ஸ் பரிமாறத் தயாரானதும் அதை  மற்ற எல்லாப் பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலக்குகிறார்.

தாய்லாந்தில் பிரபலமடையும் கருப்பு நூடுல்ஸ்: இணையவாசிகளை ஈர்க்கும் தயாரிப்பு வீடியோ | Thailands Unique Black Noodles Viral Video

மில்லியன் பார்வையாளர்கள்

இணையத்தில் வைரலான இந்த வீடியோவிற்கு “தாய்லாந்தின் தனித்துவமான தெரு உணவு” என தலைப்பிட்டுள்ளனர்.

பிப்ரவரி 1ம் திகதி பகிரப்பட்ட இந்த வீடியோ ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் ஒரு லட்சம் விருப்பங்களையும் குவித்துள்ளது. 

பல பயனர்கள் இதை மார்வெல் திரைப்பட கதாபாத்திரமான  ‘Venom’ ஐ ஒத்திருப்பதை சுட்டிக்காட்டி, இதற்கு “விஷ நூடுல்ஸ்” என்று பெயரிட்டுள்ளனர். 





Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.