ஷியோபூர், தென் ஆப்ரிக்காவில் இருந்து எடுத்து வரப்பட்ட 12 சிவிங்கிப்புலிகள், மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடப்பட்டன.
மத்திய அரசின் சிவிங்கிப்புலி திட்டத்தின் கீழ், ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து எட்டு சிவிங்கிப்புலிகள், கடந்த ஆண்டு செப்., மாதம் இந்தியாவுக்கு எடுத்து வரப்பட்டன.
இவற்றை, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவுக்கு பிரதமர் மோடி அளித்தார். அதேபோல், இந்த ஆண்டும், 14 – 16 சிவிங்கிப்புலிகள் இந்தியாவுக்கு எடுத்து வரப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி, 12 சிவிங்கிப்புலிகள் தென் ஆப்ரிக்காவில் இருந்து நேற்று இந்தியா வந்தன.
குவாலியர் விமான தளத்துக்கு வந்த ஏழு ஆண் மற்றும் ஐந்து பெண் சிவிங்கிப்புலிகள், இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்கள் வாயிலாக குனோ தேசிய பூங்காவுக்கு எடுத்து வரப்பட்டன.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர், தேசிய பூங்காவில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில், 12 சிவிங்கிப்புலிகளை விடுவித்தனர்.
இதையடுத்து, குனோ தேசிய பூங்காவில் உள்ள சிவிங்கிப்புலிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
நம் நாட்டின் கடைசி சிவிங்கிப்புலி, சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் உயிரிழந்ததை அடுத்து, இந்த இனம் அழிந்துவிட்டதாக 1952ல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement