Actor Mayilsamy: சினிமா முதல் அரசியல் வரை.மறைந்த நடிகர் மயில்சாமி கடந்து வந்த பாதை..!

57 வயதான பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் காலமானார். 1985 ஆம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கத்தில் பிரபு, ரேவதி என பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கன்னிராசி. இப்படத்தில் மளிகை பொருட்களை எடுத்து வரும் நபராக சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரையில் அறிமுகமானார் மயில்சாமி.

அதன் பின் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த மயில்சாமி விவேக் மற்றும் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்தார். அவ்வாறு இணைந்து நடிக்கையில் இவரின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை வெகுவான ஈர்க்க துவங்கின.

Rajini: டூப் பயன்படுத்தலாம்..அதுக்குன்னு இப்படியா ? ஆதாரத்துடன் ரஜினியை கலாய்த்த விஜய் ரசிகர்கள்..வெடித்த மோதல்..!

என்னதான் ஓரிரு காட்சிகளில் தோன்றினாலும் ரசிகர்ளின் மனதில் நிலைத்திருக்கும் வகையில் மயில்சாமியின் காமெடிகள் அமையும். அதன் காரணமாகவே இவரின் நகைச்சுவைக்கென தனி ரசிகர்கள் இருந்தனர். மேலும் ரஜினி, கமலில் துவங்கி பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த மயில்சாமி மேடை நாடகங்களின் மூலம் நடிகராகவேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொண்டார்.

காரை கயிறு கட்டி இழுத்த கூல் சுரேஷ் !
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

சிறு வயதில் பல மேடை நாடகங்களில் நடித்துள்ள மயில்சாமி தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியுள்ளார். இந்நிலையில் புரட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.யாரின் தீவிர ரசிகரான மயில்சாமி அவரைப்போலவே உதவும் பண்பு உள்ளவர்.

எந்த உதவியாக இருந்தாலும் ஓடோடி செய்யும் மயில்சாமி எம்.ஜி.யார் மீது கொண்ட பற்றினால் அரசியல் காட்சியிலும் இருந்துள்ளார். பின்பு கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார் மயில்சாமி.

இந்நிலையில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு அதிகாலை வீடு திரும்பியுள்ளார் மயில்சாமி. அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த மயில்சாமியை போரூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது அவரின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

57 வயதான மயில்சாமிக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்தாண்டு ஒருமுறை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென மயில்சாமியின் உயிர் பிரிந்ததை எண்ணி திரையுலகை சார்ந்தவர்களும், ரசிகர்களும் பேரதிர்ச்சியில் உள்ளனர்.

நல்ல நடிகர் என்பதையும் தாண்டி அனைவர்க்கும் உதவும் குணம் உடையவர் என்பதாலும், அனைவரிடமும் அன்பாக பழக்ககூடிய மனிதர் மயில்சாமி என்பதாலும் இவரின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவரது மகன் அருமைநாயகமும் சினிமா துறையில் நடிகராக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.