Mayilsamy:விடிய விடிய கோவிலில் இருந்துவிட்டு வீட்டிற்கு சென்ற 30 நிமிடத்திற்குள் இறந்த மயில்சாமி

சிவபக்தரான நடிகர் மயில்சாமி சிவராத்திரி நாளில் உயிரிழந்துவிட்டார். 57 வயதான மயில்சாமி படங்களில் நடிப்பது தவிர்த்து மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கும் பெயர் போனவர். வரும்போது எதை கொண்டு வந்தோம். போகும் போது எதை கொண்டு போகப் போகிறோம். அதனால் காசு பணம் பார்க்காமல் உதவி செய்ய வேண்டும் என்று உதவியவர் மயில்சாமி.

சிவன் மீது அதிக பக்தி கொண்ட மயில்சாமி சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் குடும்பத்துடன் கோவிலில் இருந்திருக்கிறார். டிரம்ஸ் சிவமணி வாசித்தபோது அவருக்கு மைக் பிடித்திருக்கிறார். பின்னர் கோவிலில் பாடவும் செய்திருக்கிறார்.

Mayilsamy Death:சிவன் கோவிலுக்கு கிளம்பியபோது உயிரிழந்த சிவபக்தர் மயில்சாமி

3 மணி அளவில் தன் குடும்பத்தாரை வீட்டில் டிராப் செய்துவிட்டு மருதீஸ்வரர் கோவிலுக்கு வருகிறேன் என சிவமணியிடம் தெரிவித்துள்ளார் மயில்சாமி. நீ ரொம்ப டயர்டா இருக்க மயிலு, வராத, போய் ரெஸ்ட் எடு என சிவமணி கூறியிருக்கிறார். அதெல்லாம் ஒன்றும் இல்லை நீங்கள் முதலில் போங்க. நான் பின்னாலேயே கோவிலுக்கு வந்துவிடுகிறேன் என வீட்டிற்கு சென்றிருக்கிறார் மயில்சாமி.

Mayilsamy: கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்த மயில்சாமி: நிறைவேற்றி வைப்பாரா ரஜினி?

வீட்டிற்கு சென்று 30 நிமிடங்கள் கூட ஆகவில்லை அவரின் உயிர் பிரிந்துவிட்டது. குடும்பத்தாரை வீட்டில் விட்டுவிட்டு கோவிலுக்கு கிளம்பிய மயில்சாமி தனக்கு ஏதோ செய்கிறது என்று கூறியிருக்கிறார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் வழியிலியே உயிர் பிரிந்துவிட்டது.

மயில்சாமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிவராத்திரியை முன்னிட்டு கோவிலுக்கு சென்றவர்கள் மயில்சாமியை அங்கு பார்த்திருக்கிறார்கள். சந்தோஷமாக இருந்த மனிதர் இன்று காலை உயிருடன் இல்லை என்பதை நம்பவே முடியவில்லை என்கிறார்கள்.

மயில்சாமியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, கொடுமை கொடுமை கொடுமை என தெரிவித்துள்ளார் மனோபாலா. மயில்சாமி பற்றி திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் ட்வீட் செய்து வருகிறார்கள்.

Mayilsamy:விவேக் போன்றே மயில்சாமியும் திடீர் மரணம்: சிரிக்க வைத்தவர்களுக்கு இப்படியொரு முடிவா?

உலக நாயகன் கமல் ஹாசன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி #Mayilsamy என தெரிவித்துள்ளார்.

மரண செய்தி அறிந்து இதயம் நொறுங்கிவிட்டது. மயில்சாமி அண்ணாவின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் நடிகர் ஆர்யா.

சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் மயில்சாமியின் உடலுக்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மயில்சாமியின் உடலை பார்த்த நடிகர் எம்.எஸ். பாஸ்கர் கதறி அழுதார்.

மயில்சாமியின் உடலுக்கு நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பார்த்திபன் கூறியதாவது, பணமோ, பதவியோ தேவையில்லை, மனம் தான் தேவை என்பதற்கு சிறந்த உதாரணம் மயில்சாமி என்றார்.

நேற்று இரவு கோவிலில் மயில்சாமி சந்தோஷமாக இசையை ரசித்த வீடியோ தான் கடைசி வீடியோ என்பது தெரியாமல் போய்விட்டதே என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் கிளாஸ்மேட்ஸ் படத்திற்காக மயில்சாமி டப்பிங் பேசிய வீடியோவும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.