அகவிலைப்படி: களத்தில் இறங்கும் ஜாக்டோ ஜியோ… தமிழக அரசுக்கு எச்சரிக்கை!

ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் மாவட்ட அளவில் போராட்ட ஆயத்த மாநாடு இன்று பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

7 அம்ச கோரிக்கைகள்தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி, பழைய ஓய்வு ஊதிய திட்டம் காலியாக உள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ மாவட்ட அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நடத்த்தியுள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் காலங்களில் கோட்டையை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் மாவட்ட அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத்தை திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலுத்துள்ளது.
ஆயத்த மாநாடுகரூரில் நடந்த மாநாட்டில் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் மாநாட்டை தொடங்கி வைத்தார். இதில் அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆயத்த மாநாட்டில் பங்களிப்பு ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை கலைய வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி, நிலுவைத் தொகை, சரண்டர் உயர் கல்விக்கான ஊக்கத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
தொகுப்பூதியம்தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கால முறையில் ஊதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தர செய்ய வேண்டும்.
நிலுவைத் தொகைசாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தின் முறைப்படுத்த வேண்டும் ஏழாவது ஊதியக்குழுவின் 21 மாத நிலுவைத் தொகை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. மேலும், மார்ச் 5 ம் தேதி இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அணைத்து மாவட்டங்களில் உண்ணாவிரதம் போராட்டம் மற்றும் மார்ச் 24 ம் தேதி தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு எடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.