ராமநாதபுரம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியை சேர்ந்தவர் சின்ன அடைக்கண் (28). டீ மாஸ்டர். இவரது மனைவி சுமதி (25). கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்தது. கர்ப்பமானதால் பெற்றோர் வீட்டுக்கு சுமதி வந்தார். அவருக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. நேற்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சுமதி, கணவர் சின்ன அடைக்கண், தாய் காளியம்மாள் மற்றும் பிறந்த குழந்தையுடன் ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பினார்.
உச்சிப்புளி அருகே ஆட்டோ சென்ற போது, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு சென்ற கார் மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த சுமதி, டிரைவர் மலைராஜ் (51) ஆகியோர் பலியாகினர். சின்ன அடைக்கண், பிறந்த குழந்தை ஆகியோர் மருத்துவமனையில் இறந்தனர். காளியம்மாள் மட்டும் சிகிச்சை பெறுகிறார்.