ஒன்றிய அரசின் திட்டங்கள் சில குடும்பங்களுக்கு மட்டுமே செல்கின்றன; அஸ்ஸாம் முதல்வர் பேச்சு.!

வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு வருகிற 27ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனே திரிபுரா தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், மூன்று மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேகாலயாவில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் மாநிலத்தில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. மாநிலத்தில் கான்ராட் சங்மா தலைமையிலான மேகாலயா ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகித்த பாஜக, தேர்தலுக்கு முன்பே கூட்டணியை முறித்துக்கொண்டு 60 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் தேர்தலில் போட்டியிடுகிறார். அதனால் தற்போதைய சூழலில் மேகாலயா சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக கட்சி, தேசிய மக்கள் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது.

இந்தநிலையில் மேகாலயாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த 17ம் தேதி மேகாலயாவில் பிரச்சாரம் மேற்கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் மற்றும் அளுங்கட்சியை கடுமையாக விமர்சித்தார்.

மேகாலயாவின் ரங்சகோனா மற்றும் தாலுஹே ஆகிய இடங்களில் தேர்தல் பேரணிகளில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவர் அமித்ஷா, ‘‘மேகாலயாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் வழங்குவதற்காக நரேந்திர மோடி அரசாங்கம் 24,ஆயிரம் ரூபாய் கோடியை வழங்கியது. ஆனால் அந்த பணத்தை மாநில அரசு பறித்துவிட்டது. மத்திய அரசு 2.5 லட்சம் வீட்டு வசதிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது, ஆனால் மக்கள் அவற்றைப் பெறவில்லை. முதல்வர் கான்ராட் சங்மா மாநிலத்தில் நிதி ஓட்டத்தை நிறுத்தினார்.

முன்னாள் முதல்வர் முகுல் சங்மா மற்றும் தற்போதைய முதல்வர் உள்ளிட்ட இரண்டு முதல்வர்களும் மாநில இளைஞர்களின் வேலைகளை பறித்து, “அவர்களின் குடும்பத்திற்காக மட்டுமே” உழைத்துள்ளனர். மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர்கள் உழைக்கவில்லை. இரண்டு குடும்பங்கள் மேகாலயாவை ஆண்டுக்கணக்கில் ஆட்சி செய்தன‘‘ என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்தநிலையில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ‘‘அனைத்து நன்மைகளும் மேகாலயா மக்களுக்கு சென்றடைவதை பாஜக உறுதி செய்ய முடியும். பிரதம மந்திரி-ஆவாஸ் யோஜ்னா போன்ற முக்கியமான திட்டங்கள் மேகாலயாவில் ஒரு சில குடும்பங்களுக்கு மட்டுமே பயனளிக்கின்றன,” என்று அவர் கூறினார்.

கர்நாடக தேர்தல்: பாஜகவின் பிளான் ‘B’ இதுதானாம்… சீக்ரெட்டாக நடக்கும் வேலைகள்!

மேலும் அசாமில் தனது அரசு மேற்கொண்டுள்ள நலத்திட்டங்களைப் பட்டியலிட்ட திரு சர்மா, பாஜக ஆட்சிக்கு வந்தால் மேகாலயாவிலும் இதே போன்ற சலுகைகளை வழங்கும் என்றார். அதேபோல் கடந்த ஆண்டு அசாமில் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக பாஜக வாக்குறுதி அளித்தது. ஏற்கனவே 50,000 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது, மீதமுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு மே மாதத்துக்குள் நியமனம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.