அதிமுக வேட்பாளர் தென்னரசு, நேற்று காலை ஈரோடு கொங்கு கலையரங்கம் பகுதியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மேள, தாளம் முழங்க பிரசாரம் செய்தார். முதல் பாயிண்ட்டில் வந்தவர்களை 2 டூரிஸ்ட் வேனில் ஏற்றி அடுத்தடுத்த இடங்களுக்கு அழைத்து சென்றனர். இப்படி டூரிஸ்ட் வேனில் பாயிண்ட் டூ பாயிண்ட் சர்வீஸ் செய்தனர்.
வேனில் அழைத்து செல்லப்பட்டவர்களில் இளைஞர்களின் டி-சர்ட்டில் எஸ்பி வேலுமணி டீம் என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஈரோடு கொங்கு கலையரங்கம் பகுதியில் ஊர்வலமாக வந்த அதிமுகவினர் சிலர் சாலையின் நடுவே பைக்குகளை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர்.