Dhanush: போயஸ் கார்டன் புதிய பிரம்மாண்ட வீட்டில் தனுஷ்: பிரபல இயக்குனர் சொன்ன விஷயம்.!

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வாத்தி’. நாக வம்சி தயாரிப்பில் தமிழ், தெலுங்கு மொழியில் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் இந்தப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் ‘வாத்தி’ படம் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வரும் நிலையில் நடிகர் தனுஷ் தனது புதிய வீட்டில் குடியேறியுள்ளது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் நடிப்பில் கடந்தாண்டு ‘திருச்சிற்றம்பலம்’ படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மித்ரன் ஜவஹர் இயக்கியிருந்த இந்தப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப்படம் 100 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. இதனையடுத்து நீண்ட இடைவேளைக்கு பின்னர் தனுஷ், செல்வராகவன், யுவன் காம்போ ‘நானே வருவேன்’ படத்தில் இணைந்தது. ‘பொன்னியின் செல்வன்’ படத்துடன் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப்படம் சுமாரான வெற்றியையே பெற்றது.

இதனையடுத்து தமிழ், தெலுங்கு மொழியில் உருவான ‘வாத்தி’ படத்தில் நடித்தார் தனுஷ். வெங்கி அட்லுரி இயக்கிய இந்தப்படத்தில் சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சித்தாரா எண்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ‘வாத்தி’ படம் கடந்த வாரம் வெளியானது. கவ்வியை வைத்து பணம் சம்பாதிக்கும் முறைகேடுகள் மற்றும் கலவியின் முக்கியத்துவம் பற்றி பேசியுள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Vijay Sethupathi: முன்னணி இயக்குனரின் படத்துக்கு ‘நோ’ சொன்ன விஜய் சேதுபதி: இதான் காரணமாம்.!

இந்நிலையில் நடிகர் தனுஷ் சென்னையில் உள்ள போயஸ் கார்டன் பகுதியில் பிரமாண்டமாக வீடு ஒன்றை கட்டிக் கொண்டிருந்தார். இதன் வேலைகள் முடிந்து அண்மையில் புதுமனை புகுவிழா நடந்துள்ளது. இதுக்குறித்து பிரபல இயக்குனர் சுப்பிரமணியன் சிவா தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

LEO: வாரே வா.. தளபதி ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி அளித்த திரிஷா: ‘லியோ’ வைப்..!

அதில், தம்பி தனுஷின் புதிய வீடு. கோவில் உணர்வு எனக்கு. வாழும் போதே தாய், தந்தையை சொர்கத்தில் வாழ வைக்கும் பிள்ளைகள் தெய்வமாக உணர படுகிறார்கள். மேலும், தன் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும், எடுத்துகாட்டாகவும், உதாரணமாகவும், உயர்ந்து விடுகிறார்கள். இன்னும்பல வெற்றிகளும் சாதனைகளும் உன்னை துரத்தட்டும். உன்னை பார்த்து ஏங்கட்டும். உன்னை கண்டு வியக்கட்டும். வாழ்க தம்பி, வாழ்வாங்கு வாழ்க என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.