சான்றிதழ் தராமல் இழுத்தடித்த கல்லூரி முதல்வரை தீ வைத்து கொளுத்திய மாணவன் | A student set fire to the principal of the college who dragged him without giving the mark certificate

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இந்தூர்: ம.பி.யில் மதிப்பெண் சான்றிதழ் தராமல் இழுத்தடித்த கல்லூரி பெண் முதல்வர் மீது பெட்ரோல் ஊற்றி முன்னாள் மாணவன் ஒருவன் கொளுத்திய சம்பவம் நடந்தது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிரபலமான பி.எம். பார்மஸி கல்லூரி உள்ளது. இங்கு முதல்வராக இருப்பவர் விமுக்தா ஷர்மா,50. இன்று மாலை கல்லூரி பணி முடிந்து 4 மணியளவில் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.அவரை வழிமறித்த 24 வயது இளைஞன் , முதல்வரிடம் வாக்குவாதம் செய்தார். உடனே சட்டென கையில் வந்திருந்த பெட்ரோலை , விமுக்தா ஷர்மா மீது ஊாற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு தப்பியோடினான்.

latest tamil news

அக்கம்பக்கத்தினர் கல்லூரி முதல்வரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் அவர் உயிருக்கு போராடி வருவதாக கூறப்படுகிறது. தீ வைத்து கொளுத்திய இளைஞனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவன் முன்னாள் மாணவன் என்பது, தனது மதிப்பெண் சான்றிதழை வழங்கிட கோரி பல முறை முதல்வரை சந்தித்தும், தராமல் இழுத்தடிப்பு செய்ததால் ஆத்திரம் தாங்காமல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியது தெரியவந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.