புதுடில்லி வெறுப்பு பேச்சு வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி, புதுடில்லி போலீசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹிந்து யுவ வாஹினி அமைப்பின் சார்பில், புதுடில்லியில் ௨௦௨௧ டிசம்பரில் ஹிந்து மாநாடு நடந்தது. இதில் பேசிய ‘சுதர்ஷன் நியூஸ்’ என்ற தனியார் ‘டிவி சேனல்’ ஆசிரியர் சுரேஷ் சாவ்ஹன்கே, மத வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்துள்ள நடைமுறைகளுக்கு எதிராக இந்தக் கூட்டம் நடந்துள்ளதாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது:
இந்த வழக்கில் விசாரணை முடிந்து விட்டதாகவும், குரல் மதிப்பீடு குறித்து அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், புதுடில்லி போலீஸ் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ் தெரிவித்து உள்ளார். எனவே, போலீசார் விரைவில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
வழக்கின் விசாரணை, ஏப்., முதல் வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement