லாகூர், பாகிஸ்தானில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 பேர் பலியாகினர்; 60 பேர் படுகாயம் அடைந்தனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாதில் இருந்து லாகூருக்கு, திருமண நிகழ்விற்காக 70க்கும் மேற்பட்டோர் பஸ்சில் நேற்று சென்றனர்.
அதிவேகமாக சென்றதால், பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்புறமாக வந்த வாகனங்கள் மீது மோதியதுடன், சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினரின் உதவியுடன் பஸ்சின் மேற்கூரையை வெட்டி, உள்ளே சிக்கியவர்களை மீட்டனர்.
இதில் 15 பேர் பலியாகினர்; படுகாயம் அடைந்த 60க்கும் மேற்பட்டோரை, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
சிகிச்சை பெறுவோரில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement