வில்லியனுார், : நண்பர் இறந்த சோகத்தால் கொத்தனார் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். .
வில்லியனுார் அடுத்த கணுவாப்பேட்டை கப்பகார வீதியை சேர்ந்தவர் கலிவரதன்,68; கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி,54; கொத்தனார். இருவரும் இணை பிரியா நண்பர்கள்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நலம் சரியின்றி அவதிப்பட்டு வந்த கலிவரதன் கடந்த 18 ம் தேதி இரவு 10:30 மணிக்கு, வீட்டு தோட்டத்தில் உள்ள எலுமிச்சை மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதனை அறிந்த அவரது நண்பர் ராமமூர்த்தி அழுது புலம்பினார். பின்னர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கலிவரதனின் இறுதி சடங்கை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்ற ராமமூர்த்தி, சற்று நேரத்தில் வீட்டு தோட்டத்தில் உள்ள பூவசரன் மரத்தில் துாக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அதனைக் கண்டு திடுக்கிட்ட குடும்பததார், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே, இறந்துவிட்டதை உறுதி செய்தார்.
இதுகுறித்து ராமமூர்த்தி மகன் கேசவவர்மா கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இணை பிரியா நண்பர்கள் இருவரும் அடுத்தடுத்து துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், வில்லியனுார் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement