ஆங்கிலக்கால்வாயில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றிக்கொண்டிருந்த சிறுபடகு: சோதனையிட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி


ஆங்கிலக்கால்வாயில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றிக்கொண்டிருந்த படகு ஒன்றை பரிசோதித்த பொலிசாருக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது.

சிறுபடகு குறித்து கிடைத்த இரகசிய தகவல்

ஆங்கிலக்கால்வாய் வழியாக சிறுபடகுகள் பிரித்தானியாவுக்குள் நுழைந்தாலே, அவற்றில் பிரான்சிலிருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் இருக்கலாம் என்ற சந்தேகம்தான் இதுவரை பொலிசாருக்கு ஏற்பட்டுள்ளது.

ஆனால், தங்களுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த படகை சோதனையிட்ட பொலிசார், படகுக்குள் ஏராளமான போதைப்பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

ஆங்கிலக்கால்வாயில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றிக்கொண்டிருந்த சிறுபடகு: சோதனையிட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி | A Shock Awaited The Police Who Checked

பெரும் அளவிலான பாதிப்பு தவிர்ப்பு

அந்த சிறு படகுக்குள் 350 கிலோ போதைப்பொருள் இருந்துள்ளது. அதன் மதிப்பு 35 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.

இவ்வளவு போதைப்பொருள் பிரித்தானியாவுக்குள் நுழைந்திருக்குமானால், எத்தனையோ பிள்ளைகளுடைய வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கலாம், நாட்டில் போதைப்பொருள் பயன்படுத்துவோரால் வன்முறை கட்டவிழ்த்துவிடப்படலாம்.

350kg of cocaine was found on board the boat

ஆக, அந்த போதைப்பொருள் சிக்கியதால், சமுதாயத்துக்கு ஏற்படவிருந்த பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
 

ஆங்கிலக்கால்வாயில் சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றிக்கொண்டிருந்த சிறுபடகு: சோதனையிட்ட பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி | A Shock Awaited The Police Who Checked

Bags found on board the boat



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.