'எனக்கு பசிக்கும்ல'… உண்ணாவிரத போராட்டத்தில் கேன்டீன் பக்கம் ஒதுங்கிய பாஜகவினர்..!

தமிழக அரசை கண்டித்து தமிழக பாஜக சென்னையில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியபோது அருகில் இருந்த உணவகத்தில் சாப்பாடு வாங்கி சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது. கிருஷ்ணகிரியில் சில தினங்களுக்கு முன்பு ராணுவ வீரரை திமுக கவுன்சிலர் அடித்து கொலை செய்த சம்பவம் மாநிலத்தை உலுக்கியது.

மேலும், கோவை நீதிமன்ற அருகே நடந்த கொலை சம்பவம் மற்றும் கடந்த நாட்களில் பல்வேறு இடங்களில் நடந்த கொலை சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்து வரும் இடைத்தேர்தல் பிரச்சாரங்களில் மக்களை ஆடு, மாடுகளை போல அடைத்து வைத்து வருவதாக திமுகவினர் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசின் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை கண்டித்து பாஜக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருந்தது. அதன்படி இன்று சென்னை சேப்பாக்கத்தில் பாஜகவினர் உண்ணாவிர போராட்டம் நடத்தினர். இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் உண்ணாவிர போராட்டத்தின் நோக்கம் மற்றும் தமிழகத்தின் தற்போதைய சட்ட ஒழுங்கு நிலை குறித்து பேசினார். அவரை தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்களும் பேசினர். இதற்கிடையே, உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேன்டீனில் மதிய உணவு வாங்கி சாப்பிட்டுள்ளனர். அந்த வீடியோவை சிலர் செல்போனில் எடுத்து பகிர்ந்துள்ளனர்.

முன்னதாக இந்த உண்ணாவிரதம் முடிந்ததும் மாலை ஓமந்தூரார் எஸ்டேட் முதல் போர் நினைவு சின்னம் வரை மெழுகுவர்த்தி பேரணி செல்லவுள்ளதாகவும் பாஜக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.