திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை வேனில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விசாரணை முடிவடையும் கட்டத்தில் நடிகர் திலீப்புக்கு எதிராக பாலச்சந்திரகுமார் என்பவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம், நடிகை மஞ்சு வாரியர் உள்பட 7 பேரிடமும் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி அளித்தது. நேற்று நடிகை மஞ்சு வாரியர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பாலச்சந்திரகுமார் போலீசிடம் அளித்த ஆடியோவில் இருப்பது நடிகர் திலீப்பின் குரல் தானா என்பது குறித்து மஞ்சு வாரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
