தேர்தல் தேதியே தெரியல…பிரேமலதாவுக்கு ஒரே கன்பியூசன்: கூட்டத்தில் இருந்து வெளியேறிய பெண்களிடம் கட்சியினர் வாக்குவாதம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சி பொருளாளர்  பிரேமலதா நேற்று மாலை 6.35 மணிக்கு குமலான்குட்டை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இரண்டு முறை வெற்றி பெற்ற அதிமுகவைச் சேர்ந்த தென்னரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதனால் அவர் செல்லும் இடமெல்லாம்  எதிர்பு தெரிவிக்கின்றனர். அதுக்கு மேல் பேசுவதற்கு அங்கு எதுவும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தின்போது வாக்குப்பதிவு நடக்கும் 29ம் தேதியன்று நீங்கள்  தேமுதிகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பிரேமலதா தெரிவித்தார்.  

கூட்டத்தில் இருந்தவர்கள் தேதி தவறு, 27ம் தேதியன்று வாக்குப்பதிவு என  தெரிவித்ததையடுத்து பின்பு தேதியை திருத்தி தெரிவித்தார். தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் இடங்களில் கூட்டம் குறைவாக இருந்து வந்தது. இதனால் மக்கள் கூட்டத்தை கூட்ட குத்தாட்டம் நேற்று நடத்தினர். இதற்காக வேன் மூலம் பெண்களை கொண்டு வந்தனர். பிரேமலதா பேச துவங்கிய சில நிமிடங்களில் அங்கு வந்திருந்த பெண்கள் கிளம்பி சென்றனர். அவர்களுடன் தேமுதிகவினர்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.