மும்பை; இந்தியா-நேபாள எல்லை வழியாக கடத்தல் தங்கம் இந்தியாவுக்குள் கொண்டு வரப்படுவதாக ஒன்றிய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஒரே நேரத்தில் பாட்னா, புனே, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஆபரேசன் கோல்டன் டான் என்ற பெயரில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் 101.7 கிலோ தங்கம், ரூ.1.35 கோடி இந்திய மற்றும் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரயில் மற்றும் விமானம் மூலம் கடத்தி வந்த சூடான் நாட்டை சேர்ந்த 7 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தி வரப்பட்ட மொத்த தங்கத்தின் மதிப்பு ரூ.51 கோடியாகும்.