எடப்பாடி எடுத்த சர்வே முடிவு: யாருக்கு வெற்றி? ஈரோடு கிழக்கு மக்கள் செம ஹேப்பி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என்பது குறித்து
எடப்பாடி பழனிசாமி
தரப்பு தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் சர்வே எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ பேக் நிறுவனம் தேர்தல் வியூகங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அதிமுகவுக்கு சுனில் தலைமையிலான டீம் பணியாற்றியது. இந்த சுனில் இதற்கு முன்பு திமுகவுக்கு பணியாற்றியவர். பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்த பின்னர் நடைபெற்ற தேர்தலில், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றதற்கு பின்னால் சுனில் டீமின் பணியும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் சுனில் டீம் அதிமுகவுக்கு பணியாற்றுவதாக சொல்கிறார்கள். அதிமுகவின் ஒற்றை தலைமையாக தன்னை முன்னிறுத்த முயலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இரட்டை இலையை தனக்கு போராடி பெற்ற எடப்பாடி, இந்த தேர்தலிலும் வெற்றி பெற்றுவிட்டால், ஓபிஎஸ்ஸை நிரந்தரமாக ஓரங்கட்டும் வேலைகள் இயல்பாய் நடக்கும் என்கிறார்கள்.

அதனாலே எடப்பாடி பழனிசாமி அளவுக்கு அதிகமாக ஸ்வீட் பாக்ஸ்களை இறக்கியுள்ளாராம். அதுமட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர்களையும் ஆளுக்கு இவ்வளவு கொடுத்துவிடுங்கள் என்று கேட்டு வாங்கி விநியோகம் செய்ய உள்ளாராம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக மக்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் சர்வே நடத்தியுள்ளதாக சொல்கிறார்கள்.

அந்த சர்வே முடிவில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் வரை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக வேட்பாளர் தென்னரசு 38 ஆயிரம் வாக்குகள் வரை பெறுவார் என்று கூறப்பட்டுள்ளதாம். நாம் தமிழர் 15 ஆயிரம் வாக்குகள் வரையும், தேமுதிக 7 ஆயிரம் வாக்குகள் வரையும் பெறும் என்று கூறப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

இந்த ரிப்போர்ட் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியளித்துள்ளது. தோல்வியைத் தழுவினாலும் அதிக வாக்கு வித்தியாசம் வந்தால் அதிருப்தியாளர்களுக்கு வாய்ப்பாக போய்விடும், இந்த ஒரு காரணத்தை காட்டியே ஓபிஎஸ் மீண்டும் எண்ட்ரி கொத்துவிடுவார் என்கிறார்கள். இதை மாற்றுவதற்காக ஸ்வீட் விநியோகத்தை அதிகரிக்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாராம் எடப்பாடி பழனிசாமி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.