பா.ம.க வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை, சென்னையில் நாளை அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிடுகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 2023-2024-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை சென்னையில் நாளை வெளியிடப்பட உள்ளது.
சென்னை தியாகராய நகர் ஜி.ஆர்.டி விடுதியில் உள்ள சதர்ன் கிராண்ட் அரங்கில் நாளை (23.02.2023) வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட உள்ளார்.