விமான போக்குவரத்து துறை அமோக வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்| Air Transport Department Amoka Varachi: Prime Minister Modi is proud

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: விமான போக்குவரத்து துறை சிறப்பாக(அமோகம்) வளர்ச்சி அடைந்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

latest tamil news

விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தொற்று பாதிப்புக்கு முன்னர், ஒரு நாளின் உள்நாட்டு விமானப் பயணிகளின் சராசரி எண்ணிக்கை, 3 லட்சத்து 98 ஆயிரத்து 579 ஆக இருந்தது.

கொரோனா தொற்றுக்கு பின்னர் உள்நாட்டில் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த பிப்.,19ம் தேதி ஞாயிற்றுக் கிழமையில் 4 லட்சத்து 44 ஆயிரத்து 845 பேர் உள்நாட்டிற்குள் விமானத்தில் பயணித்துள்ளனர் எனக் கூறியிருந்தார்.

latest tamil news

இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: விமான போக்குவரத்து துறை சிறப்பாக(அமோகம்) வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டில் அதிக விமான நிலையங்கள் உருவாகியுள்ளன. விமான பயணங்கள் மக்களை ஈர்த்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஊக்கமளிக்கிறது என மோடி பதலளித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.