வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முன்னாள் ஐகோர்ட் நீதிபதி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
உ.பி. மாநிலம் அலகாபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி எஸ்.என். சுக்லா, இவர் கடந்த 2014-19-ம் ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 2.42 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. ஏற்கனவே வழக்கு ஒன்றில் எதிர் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க லஞ்சம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
![]() |
இவர் 2020 ஜூலை மாதம் சுக்லா ஒய்வு பெற்றார்.இந்நிலையில் 2019- டிசம்பர் மாதம் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படும் நிலையில், இன்று மாஜி நீதிபதி எஸ்.என். சுக்லா மற்றும் அவரது மனைவி ஆகிய இவரும் மீதும் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement