செங்கல்பட்டு: தமிழ்நாட்டில் முழுமையான ஆட்சி மொழியாகவும், பயிற்சி மொழியாகவும் அன்னை தமிழ் விளங்கும் என்று இந்த ஆட்சி மீது நம்பிக்கை வைத்து கூறுவதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழை தேடி என்ற தலைப்பில் பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ள அவர், 2வது நாளாக செங்கல்பட்டு மாவட்டம் மதுரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்று கூறிய அவர், அழிவின் விளிம்பில் இருந்து அன்னை தமிழை மீட்டெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் தமிழ் எங்கு உள்ளது என்று கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசளிக்க தயார் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழை தேடி மதுரை நோக்கி பரப்புரை பயணம் செல்லும் தமக்கு அனைவரும் வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்ட ராமதாஸ், அனைவரின் வாழ்த்துகளோடு தாம் மதுரை நோக்கி செல்வதாக கூறியுள்ளார். தமிழை இந்த ஆட்சி காக்கும் என்று நம்புவதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றங்களில் தமிழுக்கு இடமில்லாதது குறித்தும் ராமதாஸ் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.