வார்சா:: அணு ஆயுத உடன்படிக்கையில் விலகுவதாக அறிவித்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டார் ரஷ்ய அதிபர் புடின் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்
அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக, அமெரிக்கா – ரஷ்யா இடையே, ‘நியூ ஸ்டார்ட்’ உடன்படிக்கை 2010ல் கையெழுத்தானது. உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ள அளவு அணு ஆயுத கட்டுப்பாட்டை இரு நாடுகளும் பின்பற்றுகிறதா என்பதை இரு நாடுகளும் பரஸ்பரம் ஆய்வு செய்து உறுதிபடுத்தி வந்தன.
கடந்த 2021 பிப்., மாதம் இந்த உடன்படிக்கை முடிவுக்கு வருவதற்கு முன், அதை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்நிலையில், இந்த உடன்படிக்கையில் இருந்து விலகிக்கொள்வதாக, ரஷ்யஅதிபர் புடின் உரையில் தெரிவித்தார். அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடத்தினால், ரஷ்யாவும் சோதனை நடத்த தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து நேற்று போலாந்தில் அதிபர் ஜோபைடன் அளித்த பேட்டியில், அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்க -ரஷ்யா நாடுகளிடையே நியூ ஸ்டார்ட் உடன்படிக்கை மிகவும் முக்கியமான ஒன்று. இதிலிருந்து விலகுவதாக புடின் அறிவித்து மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். விலகுவதற்கான காரணாத்தை தெரிவிக்க வேண்டும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement