
ஜெயம் ரவியின் அகிலன் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்ரவி, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள படம் அகிலன். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று முடிந்தது. சாம் சி எஸ் இசையமைக்க, ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்துள்ளது. துறைமுகம் தொடர்பான கதைக்களத்தில் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மார்ச் 10ம் தேதி படம் திரைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.