ஓ.பன்னீர்செல்வம் அடுத்த மூவ்… இறுதி தீர்ப்பு வந்ததும் ரகசிய டீலிங்- அதிமுகவிற்கு டெல்லி சிக்னல்!

அதிமுக யார் கையில் என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு இன்றைய தினம் பதில் கிடைத்துவிடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரட்டை தலைமையின் கீழ் ஐந்து ஆண்டுகள் அதிமுக செயல்பட்டு வந்தது. உள்ளுக்குள் சில குமுறல்கள் இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதி காத்து வந்தனர். இந்த சூழலில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தனது பலத்தை நிரூபித்து ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டினார் எடப்பாடி பழனிசாமி.

ஓபிஎஸ் முட்டுக்கட்டைஅதன்பிறகு தன்னை இடைக்கால பொதுச் செயலாளராகவும் அறிவிக்க செய்தார். இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதாவின் இடத்தை பிடித்து கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக உச்சபட்ச அதிகாரம் கொண்ட நாற்காலியில் அமர்ந்துவிட தீவிரம் காட்டினார். அதற்குள் ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்ற வழக்குகளால் முட்டுக்கட்டை போட எடப்பாடியின் வேகம் குறைந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு என பல்வேறு கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டன.
உச்ச நீதிமன்றம் தீர்ப்புஇந்த சூழலில் இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று (பிப்ரவரி 23) இறுதி தீர்ப்பு வழங்கவுள்ளது. இதில் தெளிவான பதில் கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள் காத்திருக்கின்றனர். ஏற்கனவே எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என எடப்பாடியின் கை ஓங்கியிருக்கிறது. இதை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. சமீபத்தில் சிவசேனா வழக்கில் ஏக்நாத் ஷிண்டேவிற்கு சாதகமாக தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்தது.
​​
தேர்தல் ஆணையத்தில் முறையீடுஇதுவும் அதிமுக விவகாரத்தில் முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி முறையிட்டு முடிவை மாற்ற முயற்சிப்பார். அதற்கு சிவசேனா விவகாரத்தை உதாரணமாக சுட்டிக் காட்ட வாய்ப்புள்ளது. அதுவே எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் அதிமுகவில் செல்வாக்கு மிகுந்த தலைவராக முன்னிறுத்தப்படுவார். அதன்பிறகு ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டாலும் பலன் கிடைக்காது என்ற பேச்சு அடிபடுகிறது.

ஓபிஎஸ் திட்டம்ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விவகாரத்தில் டெல்லியின் அதிகார மையம் ஓபிஎஸ்சை கைவிட்டு விட்டது. சமாதான பேச்சுவார்த்தை என்ற பெயரில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர், இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி கையில் ஒப்படைத்து விட்டு சைலண்ட் மோடிற்கு சென்றார் ஓபிஎஸ். இவ்வாறு எல்லா பக்கங்களிலும் ஓபிஎஸ்சிற்கு சிக்கல்கள் காத்திருக்கின்றன. எனவே எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் ஓபிஎஸ் அவருடன் கைகோர்க்க தயாராவாரா? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
அதிமுக எதிர்காலம்இல்லையெனில் அவரது அரசியல் எதிர்காலம் பெரும் சிக்கலாக மாறிவிடும். ஏற்கனவே சசிகலாவிற்கு எதிராக தர்ம யுத்தத்தை தொடங்கி எடப்பாடி உடன் கைகோர்த்து நம்பர் 2 அரசியலை தான் பெற முடிந்தது. இதுபோன்ற நிலையை தான் மீண்டும் பெற முடியும் என்கின்றனர். ஆனால் தற்போதைய சூழலில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சேர்த்து கொள்ளும் மனநிலையில் எடப்பாடி தரப்பு இல்லை. ஒருவேளை டெல்லி அழுத்தம் கொடுத்து அணிகளை இணைய வைக்கலாம்.
மக்களவை தேர்தல்ஏனெனில் பாஜக வரும் 2024 மக்களவை தேர்தலில் ஒருசில இடங்களில் வெற்றிக்கு முயற்சி செய்தால் அதற்கு அதிமுகவின் தயவு நிச்சயம் தேவை. எடப்பாடிக்கு கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு இருக்கிறது என்றால், ஓபிஎஸ்க்கு தென் மண்டலத்தில் செல்வாக்கு உள்ளது. இந்த இரண்டு மண்டலங்களிலும் சில தொகுதிகளுக்கு பாஜக குறிவைத்துள்ளது. எனவே இருவரின் ஆதரவையும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
​​
டெல்லி டீலிங்இப்படி ஒரு சூழலில் ஒன்றுபட்ட அதிமுகவை நோக்கி டெல்லி நகரும். அதற்கு ஓபிஎஸ் சம்மதம் தெரிவித்தாலும் எடப்பாடி என்ன சொல்லப் போகிறார்? ஓபிஎஸ்க்கான இடம் அதிமுகவில் என்ன? ஓபிஎஸ்சின் அரசியல் எதிர்காலம் என்ன? எனப் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இறுதி தீர்ப்பு வந்ததும் டெல்லி மூலம் ரகசியமாக சில டீலிங்குகளை முடிக்க ஓபிஎஸ் தரப்பு மும்முரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.